செய்திகள்

ஒடிசாவில் தீயணைப்பு படையினரின் வேலைநிறுத்தம் மூன்றாம் நாளை எட்டியது

Published On 2018-09-26 11:07 GMT   |   Update On 2018-09-26 11:07 GMT
காவல் துறையினருக்கு இணையான சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒடிசா மாநிலத்தில் தீயணைப்பு படையினரின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று மூன்றாம் நாளை எட்டியது. #Firemenstrike #OdishaFiremenstrike
புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலத்தில் போலீசாருக்கு இணையான சம்பளம், ஏழாவது சம்பளக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்துதல், ஒப்பந்த பணியாளர்கள் சுமார் ஆயிரம் பேருக்கு பணி நிரந்தரம், ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அம்மாநிலத்தில் உள்ள 341 தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பணியாளர்கள் கடந்த 24-ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில், தீயணைப்பு துறைக்கு வரும் அவசர அழைப்புகளை ஏற்பதற்கு யாருமில்லாததால் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் நேற்று கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும், பலசோர் மாவட்டத்தின்பலியாபால் மற்றும் நய்கர் மாவட்டத்தின் டசப்பல்லா ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட இரு தீவிபத்துகளால் ஏராளமான பொருட்கள் நாசமடைந்தன.

இதைதொடர்ந்து, அவசர அழைப்பை ஏற்காமல் கடமையில் இருந்து தவறிய குற்றத்துக்காக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் 6 பேரை பணியில் இருந்து இடைக்கால நீக்கம் செய்து மாநில தீயணைப்புத்துறை டி.ஜி.பி. பி.கே.ஷர்மா இன்று உத்தரவிட்டுள்ளார். #Firemenstrike #OdishaFiremenstrike
Tags:    

Similar News