செய்திகள்

முக்கிய பிரமுகர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வேண்டும்- துணை ஜனாதிபதி

Published On 2018-09-25 05:52 GMT   |   Update On 2018-09-25 05:52 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முக்கிய பிரமுகர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். #TirupatiTemple #VenkaiahNaidu
திருமலை:

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று இரவு திருப்பதிக்கு வந்தார். அவர் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்தார்.

இன்று காலையில் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்கு பிறகு தேவஸ்தான அதிகாரிகள் ஆலய அர்ச்சகர்கள் அவருக்கு தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.

துணை ஜனாதிபதி பதவியேற்று ஓராண்டு நிறைவையொட்டி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தேன். திருப்பதி கோவிலில் முக்கிய பிரமுகர்கள் யாராக இருந்தாலும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சாமி தரிசனம் செய்ய வேண்டும்.


திருப்பதி தேவஸ்தானம் முக்கிய பிரமுகர்கள் ஒரு முறை மட்டுமே சாமி தரிசனம் செய்யும் நடைமுறையை கொண்டுவர வேண்டும். அப்போது தான் மற்றவர்கள் சாமி தரிசனம் செய்ய முடியும்.

தமிழக முதல்-அமைச்சர் தம்மை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் வேறு பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை

இவ்வாறு அவர் கூறினார்.

மாவோயிஸ்டுகள் குறித்து கேட்ட கேள்விக்கு கோவிலில் இதுகுறித்து எதுவும் குறிப்பிட விரும்பவில்லை என்றார்.  #TirupatiTemple #VenkaiahNaidu
Tags:    

Similar News