செய்திகள்

மத்திய மந்திரியாக உள்ளதால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்னை பாதிக்கவில்லை - ராம்தாஸ் அத்வாலே

Published On 2018-09-15 21:49 GMT   |   Update On 2018-09-15 21:49 GMT
தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எனக்கு எந்த பாதிப்பும் இ்ல்லை என மத்திய மந்திரி அத்வாலே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #FuelPriceHike #RamdasAthawale
ஜெய்ப்பூர்:

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை மக்களின் கடும் அதிருப்தியை சம்பாதித்து வருகிறது. போராட்டங்கள் வலுத்து வரும் சூழ்நிலையிலும் பெட்ரோல் டீசல் விலை குறைந்தபாடில்லை. மாறாக, ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

இந்நிலையில், மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:



தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஏனென்றால் நான் ஒரு மத்திய மந்திரி, எனக்கு அரசின் சலுகைகள் உள்ளன. அவற்றை நான் பயன்படுத்தி வருவதால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி எனக்கு கவலையில்லை. எனது மந்திரி பதவி பறிபோனால்தான் நான் பாதிப்பு அடைவேன் என கூறினார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், மத்திய மந்திரியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #FuelPriceHike #RamdasAthawale
Tags:    

Similar News