செய்திகள்

வீடு தேடி வரும் சேவை திட்டத்தை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர் - கெஜ்ரிவால் வேதனை

Published On 2018-09-15 19:18 GMT   |   Update On 2018-09-15 19:18 GMT
டெல்லியில் அறிமுகப்படுத்தியுள்ள வீடு தேடி வரும் சேவை திட்டத்தை சிலர் சீர்குலைக்க முயற்சி செய்கின்றனர் என முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். #ArvindKejriwal #DoorstepDeliveryServices
புதுடெல்லி:

டெல்லியில் வீடு தேடி சென்று சேவை அளிக்கும் திட்டம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் அங்கு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ரேஷன், திருமணச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், புதிய குடிநீர் இணைப்பு உள்பட 40 வகை சேவைகளுக்கு இணையம் மூலம் விண்ணப்பித்தால் வீடு தேடி வந்து சேவைகள் வழங்கப்படும் திட்டத்தை டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார்.

இந்த சேவைகளை பதிவு செய்ய கால் சென்டர் எண் 1076-யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் அளித்தால் பயணிகளின் இல்லத்திற்கே சென்று சேவை அளிக்கப்படுகிறது. இந்த சேவைகளுக்கு 50 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.



இந்நிலையில், டெல்லியில் அறிமுகப்படுத்தியுள்ள வீடு தேடி வரும் சேவை திட்டத்தை சிலர் சீர்குலைக்க முயற்சி செய்கின்றனர் என முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், அரசியல் காரணங்களுக்காக வீடு தேடி வரும் சேவை திட்டத்தை சிலர் சீர்குலைக்க முயற்சி செய்கின்றனர். இது எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என பதிவிட்டுள்ளார். #ArvindKejriwal #DoorstepDeliveryServices
Tags:    

Similar News