செய்திகள்

விபத்தில் இறந்த மகன் - ஆம்புலன்ஸ் தர மறுத்ததால் தோள்களில் தூக்கிச் சென்ற தந்தை

Published On 2018-09-08 09:25 GMT   |   Update On 2018-09-08 09:25 GMT
பீகார் மாநிலத்தில் விபத்தில் இறந்த 11 வயது சிறுவனின் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் தர மறுத்ததால், சிறுவனின் தந்தை அவரை தோளில் தூக்கிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Bihar
பாட்னா:

பீகார் மாநிலம் நாலந்தா பகுதியில் நேற்று 11 வயது சிறுவன் வாகன விபத்தில் காயம் அடைந்தான். அப்போது அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைத்தும் நீண்ட நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். தனது மகன் இறந்த செய்தி கேட்ட சிறுவனின் தந்தை கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.



அதுமட்டுமின்றி, இறந்த சிறுவனின் உடலை எடுத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தனது மகனின் உடலை தந்தை தாமே தோளில் தூக்கிச் சென்றுள்ளார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் இருசக்கர வாகனம் மூலம் சிறுவனின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல உதவியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், குறித்த நேரத்துக்கு ஆம்புலன்ஸ் வந்திருந்தால் சிறுவனின் உயிரை காப்பாற்றி இருக்கலாம் எனவும் இறந்த சிறுவனின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து சிறுவன் இறந்த விவகாரத்தில் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது கண்டனங்கள் குவிந்து வருகின்றன. #Bihar
Tags:    

Similar News