செய்திகள்

ஓரின சேர்க்கை வழக்கு தீர்ப்பு: இப்போதுதான் சுதந்திரம் கிடைத்து இருக்கிறது - திருநங்கை நீதிபதி மகிழ்ச்சி

Published On 2018-09-07 03:38 IST   |   Update On 2018-09-07 03:38:00 IST
நமது நாட்டுக்கு நீண்ட காலத்துக்கு முன்னரே சுதந்திரம் கிடைத்து விட்டது. ஆனால் எங்களுக்கு இப்போதுதான் சுதந்திரம் கிடைத்து இருக்கிறது என திருநங்கை நீதிபதி ஜோயிதா மாண்டர் கூறியுள்ளார். #Transgender #JudgeJoyitaMondal
கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலத்தின் முதல் லோக்அதாலத் திருநங்கை நீதிபதி என்ற சிறப்புக்கு உரியவர், ஜோயிதா மாண்டர் மாஹி.

அங்கு வடக்கு தினஜ்பூர் மாவட்டத்தில் பணியாற்றி வருகிற அவர் ஓரின சேர்க்கை, தண்டனைக்கு உரிய குற்றம் அல்ல என்னும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், “நமது நாட்டுக்கு நீண்ட காலத்துக்கு முன்னரே சுதந்திரம் கிடைத்து விட்டது. ஆனால் எங்களுக்கு இப்போதுதான் சுதந்திரம் கிடைத்து இருக்கிறது” என கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, “இப்போதுதான் இந்திய குடிமகளாக உணர்கிறேன்” என்றும் குறிப்பிட்டார். #Transgender #JudgeJoyitaMondal
Tags:    

Similar News