செய்திகள்

அசாமில் பிரம்மபுத்திரா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 20 பேர் பலி?

Published On 2018-09-05 17:36 IST   |   Update On 2018-09-05 17:36:00 IST
அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா ஆற்றில் சென்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது இதில் 20 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #AssamBoatAccident
கவுகாத்தி:

அசாமம் மாநிலத்தின் பிரம்மபுத்திரா ஆற்றில் கவுகாத்தியில் இருந்து மத்திய கந்தாவிற்கு 45 பயணிகளுடன் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த படகு திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் மற்றும் அசாம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் ஆற்றில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்திற்குள்ளான படகில் பெண்கள் மற்றும் குழந்தைகள் இருந்தாகவும், இந்த விபத்தில் 20 பேர் பலியானதாகவும்  கூறப்படுகிறது.

இந்தியாவின் மிகப் பெரிய ஆறான பிரம்மபுத்திரா அசாம், மேகாலயா வழியாக வங்கதேசத்துக்குச் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #AssamBoatAccident
Tags:    

Similar News