செய்திகள்

கட்சி தாவல் தடை சட்டத்தை கடுமையாக்க வேண்டும் - துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

Published On 2018-09-04 15:35 GMT   |   Update On 2018-09-04 15:35 GMT
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வேறு கட்சிக்கு தாவும் போது, பதவி தானாகவே பறிபோகும் வண்ணம் கட்சி தாவல் தடை சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார். #VenkaiahNaidu
புதுடெல்லி:

துணை ஜனாதிபதியாக பதவி ஏற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், வெங்கையா நாயுடு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநிலங்களவையின் கண்ணியத்தையும், கவுரவத்தையும் மீண்டும் நிலைநிறுத்துவதுதான் எனது முன்னுரிமை பணி. தவறு செய்யும் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும். மாநிலங்களவை விதிமுறைகளை மாற்றி அமைப்பதற்கான குழு, தனது முதல்கட்ட அறிக்கையை என்னிடம் தந்துள்ளது.

இறுதி அறிக்கை, அடுத்த மாத இறுதியில் கிடைக்கும். கட்சி தாவல் தடை சட்டத்தை கடுமையாக்கும் வகையில், அதில் கடுமையான உட்பிரிவுகளை சேர்க்க வேண்டும். கட்சியை விட்டு விலகுபவர், தனது எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. பதவியை தானாகவே துறந்துவிடும் வகையில், விதிமுறைகளை சேர்க்க வேண்டும். இது, ஒரு தார்மீக பொறுப்பு. ஆனால், சிலர் இதை செய்வார்கள், சிலர் செய்ய மாட்டார்கள். ஆகவே, இதை அரசியல் சட்ட கடமையாக ஆக்க வேண்டும் என கூறியுள்ளார். 
Tags:    

Similar News