செய்திகள்

ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த சட்ட ஆணையம் பரிந்துரை

Published On 2018-08-30 13:50 GMT   |   Update On 2018-08-30 13:50 GMT
மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. #LawCommission
புதுடெல்லி:

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையை மத்திய பா.ஜ.க அரசு அறிவித்தது. இதன்மூலம் தேர்தல் செலவுகள் குறைக்கப்படும் எனவும் தெரிவித்தது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படும் தமிழகம் போன்ற மாநிலங்கள் கூட இந்த தேர்தல் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறை மூலம் மக்களின் வரிப்பணம் மிச்சமாகும் எனவும், ஜம்மு காஷ்மீரை தவிர அனைத்து மாநிலங்களிலும் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களை நடத்தலாம் எனவும் சட்ட ஆணையம் தெரிவித்துய்ள்ளது.

மேலும், மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த அரசியல் சாசனப் பிரிவு 172-ஐ திருத்தம் செய்யாமல் சாத்தியமில்லை எனவும் சட்ட ஆணையம் குறிப்பிட்டுள்ளது. #LawCommission
Tags:    

Similar News