செய்திகள்

அஞ்சல் வங்கிக்கு மேலும் ரூ.635 கோடி நிதி - மத்திய மந்திரிசபை ஒப்புதல்

Published On 2018-08-30 04:35 IST   |   Update On 2018-08-30 04:35:00 IST
அஞ்சல் வங்கிக்கு மேலும் ரூ.635 கோடி நிதியை வழங்குவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் தரப்பட்டது. #PostPaymentBank
புதுடெல்லி:

நமது நாட்டில் அஞ்சல் துறையும் வங்கித்துறையில் கால் பதிக்கிறது. அந்த வகையில், அஞ்சல் துறை சார்பில் ‘ஐ.பி.பி.பி.’ என்ற பெயரில் இந்திய அஞ்சல் பணப்பட்டுவாடா வங்கி தொடங்கப் படுகிறது. இந்த வங்கியை 1-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த வங்கியை தொடங்குவதற்காக ரூ.800 கோடி நிதி ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு உள்ளது.

இப்போது இந்த வங்கி தொடங்குவதற்கான செலவு, திருத்திய மதிப்பீட்டின்படி ரூ.1,435 கோடி ஆகும். எனவே இந்த வங்கிக்காக மேலும் ரூ.635 கோடி நிதி வழங்குவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் தரப்பட்டது.

இந்த தகவலை தகவல் தொடர்பு துறை மந்திரி மனோஜ் சின்கா, நிருபர்களிடம் தெரிவித்தார்.  #PostPaymentBank
Tags:    

Similar News