செய்திகள்
மிக அபூர்வ லயன் மீன்கள்.

மிக அழகியது- மிக கொடிய வி‌ஷமுடைய அபூர்வ லயன் மீன் திருச்சூரில் சிக்கியது

Published On 2018-08-28 05:11 GMT   |   Update On 2018-08-28 05:11 GMT
கேரள மாநிலம் திருச்சூரில் மீனவரின் வலையில் சிக்கிய மிக அழகியதும், கொடிய விஷத்தன்மை கொண்ட அபூர்வ லயன் மீனை அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஆச்சரியமாக பார்த்து சென்றனர். #LayanFish
கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் எடக்கழியூரை சேர்ந்தவர் அபுபக்கர். மீன்பிடி தொழிலாளி. இவர் நேற்று அதே பகுதியில் உள்ள கடற்கரையில் மீன் பிடிக்க சென்றார்.

கடலில் வலை வீசியபோது 2 அதிசய மீன்கள் சிக்கின. லைன் மீன் என்று அழைக்கப்படும் இந்த மீன்களுக்கு ஷீபா மீன், டர்க்கி மீன் என்ற வேறு பெயர்களும் உண்டு. இந்த வகை மீன்கள் இந்தோ- பசிபிக் கடலில் மட்டுமே கிடைக்கும்.

மிக அழகிய வகையான மீன் வகையை சேர்ந்த இவைகள் கொடிய வி‌ஷத்தன்மை கொண்டதாகும். மீன் தொட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இந்த மீன்களை அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பார்த்து சென்றனர்.#LayanFish
Tags:    

Similar News