செய்திகள்

இளம்பெண்ணுடன் ஓட்டலில் தகராறு - ராணுவ மேஜர் கோகோய் தவறிழைத்தது உறுதியானது

Published On 2018-08-27 20:01 IST   |   Update On 2018-08-27 20:01:00 IST
ஸ்ரீநகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் இளம்பெண்ணுடன் நுழைந்து தகராறு செய்த ராணுவ மேஜர் லீதுல் கோகோய் மீதான குற்றம் ராணுவ கோர்ட்டில் உறுதியாகியுள்ளதால், அவர் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். #MajorGogoi #MajorGogoiGuilty #Army
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் தொகுதிக்கு கடந்தாண்டு நடந்த இடைத்தேர்தலின் போது, பொதுமக்கள் பாதுகாப்பு படையினர் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர். அப்போது, ராணுவ மேஜர் லீதுல் கோகோய் அங்குள்ள இளைஞர் ஒருவரை பிடித்து தனது ஜீப்பில் கட்டி ஊர்வலமாக சென்றார். இந்த சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த மே மாதம் ஸ்ரீநகரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு இளம்பெண்ணுடன் லீதுல் கோகோய் நுழைந்து தகராறு செய்தார். இதனை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீதான விசாரணை ராணுவ கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், கோகோய் மீதான குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது.

இதன் காரணமாக அவர் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். ராணுவ கோர்ட் தனது விசாரணை அறிக்கையை ராணுவ தலைமையகத்திடம் கொடுத்துள்ளதாகவும், விரைவில் அவருக்கு தண்டனை அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News