செய்திகள்

60 நாட்கள் நடைபெற்ற அமர்நாத் யாத்திரை இன்றுடன் நிறைவு

Published On 2018-08-26 11:49 GMT   |   Update On 2018-08-26 11:49 GMT
காஷ்மீரில் பனிலிங்கத்தை தரிசனம் செய்து வந்த அமர்நாத் யாத்திரை ரக்‌ஷா பந்தன் தினமான இன்றுடன் நிறைவடைந்துள்ளது. #AmarnathYatra
ஸ்ரீநகர்:

காஷ்மீரில் அமர்நாத் குகை கோவிலில் உருவான பனிலிங்கத்தை நாடு முழுவதிலும்  இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்துள்ளனர்.

ஜம்முவில் இருந்து பாகல் காம் மற்றும் பகவதி நகர் ஆகிய இரு வழித்தடங்கள் வழியாக இந்த யாத்திரை நடைபெற்றது. பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாதுகாப்பு படையினர் தகுந்த ஏற்பாடுகளை செய்திருந்தனர்.



இந்நிலையில், கடந்த 60 நாட்களாக நடைபெற்று வந்த அமர்நாத் யாத்திரை ரக்‌ஷா பந்தன் தினமான இன்றுடன் நிறைவடைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், இந்தாண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி தொடங்கியது. கடந்த 60 நாட்களாக நடைபெற்று வந்த அமர்நாத் யாத்திரை இன்றுடன் முடிவடைந்துள்ளது. இந்தாண்டு யாத்திரையில் 2 லட்சத்து 84 ஆயிரம் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் என தெரிவித்துள்ளனர். #AmarnathYatra
Tags:    

Similar News