செய்திகள்

மாட்டிறைச்சி சாப்பிட்டதால்தான் கேரளாவில் வெள்ளம் - பாஜக எம்.எல்.ஏ.

Published On 2018-08-26 07:22 GMT   |   Update On 2018-08-26 07:22 GMT
மாட்டிறைச்சி சாப்பிடுவதால்தான் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது என்று கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ. பசன்கவுடா பட்டில் யட்னால் கருத்து தெரிவித்துள்ளார். #KeralaFloods
விஜய்புரா:

கேரள மாநிலத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளம் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. வெள்ளத்தால் 370 பேர் பலியானார்கள். ரூ.19,500 கோடிக்கு இழப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் மாட்டிறைச்சி சாப்பிடுவதால்தான் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது என்று கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ.வும், முன்னாள் மத்திய மந்திரியுமான பசன்கவுடா பட்டில் யட்னால் சர்ச்சை அளிக்கும் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்து உணர்வுகள் தூண்டி விடப்பட்டால் மதம் தண்டிக்கும். உதாரணமாக கேரளாவில் என்ன நடந்தது என்பதை பாருங்கள் அந்த மாநில மக்கள் நேரிடையாகவே மாட்டிறைச்சி சாப்பிடுவதை ஆதரித்தனர். கடந்த ஆண்டு இதே மாதம் தான் அங்கு மாட்டு இறைச்சி திருவிழா நடத்தப்பட்டது. கேரளா வெள்ளத்துக்கு இதுதான் காரணம்.

கர்நாடகா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் எடியூரப்பா மீண்டும் முதல்-மந்திரி ஆவார். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மாடு படுகொலை தடை செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #KeralaFloods #KeralaFloods2018
Tags:    

Similar News