செய்திகள்

ராம்லீலா மைதானத்துக்கு வாஜ்பாய் பெயரா? - வடக்கு டெல்லி மாநகராட்சி விளக்கம்

Published On 2018-08-25 11:43 GMT   |   Update On 2018-08-25 11:43 GMT
டெல்லி ராம்லீலா மைதானத்துக்கு மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்டப்படுவதாக வெளியான செய்திக்கு டெல்லி மாநகராட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. #RamlilaMaidan ##RamlilaMaidanrename
புதுடெல்லி:

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ம் தேதி காலமானார். அவரது உடல் அரசு முழு மரியாதையுடன் டெல்லி ஸ்மிருதி ஸ்தல் திடலில் தகனம் செய்யப்பட்டது. அதன்பின்னர் அவரது அஸ்தி மாநிலம் முழுவதிலும் உள்ள பல்வேறு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ராம்லீலா மைதானத்திற்கு வாஜ்பாய் பெயரை சூட்டுவதற்கு வடக்கு டெல்லி மாநகராட்சி முடிவு செய்துள்ளது. வரும் மாநகராட்சி கூட்டத் தொடரில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின.  இதை டெல்லி வடக்கு மாநகராட்சி மேயர் ஆடேஷ் குப்தா இன்று மறுத்துள்ளார்.

டெல்லி ராம்லீலா மைதானத்துக்கு மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரை சூட்டும் திட்டம் எதுவும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இதுதொடர்பாக கருத்து தெரிவித்த டெல்லி பா.ஜ.க. தலைவர் மனோஜ் திவாரி, ‘இவ்விவகாரத்தில் சிலர் வதந்தியை உருவாக்க நினைக்கிறார்கள், நாம் அனைவரும் ராமரை வழிபாடு செய்பவர்கள். எனவே, ராம்லீலா மைதானத்தின் பெயரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை’ என தெரிவித்திருந்தார். #RamlilaMaidan ##RamlilaMaidanrename 
Tags:    

Similar News