செய்திகள்

அகில இந்திய காங்கிரஸ் பொருளாளராக அகமது பட்டேல் நியமனம்

Published On 2018-08-21 09:34 GMT   |   Update On 2018-08-21 09:34 GMT
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய பொருளாளராக அகமது பட்டேல் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். #Congress #RahulGandhi #AhmedPatel
புதுடெல்லி:

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற ராகுல் காந்தி அக்கட்சியின் அமைப்பில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். காரிய கமிட்டி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் புதிய நியமனங்களையும் அவர் செய்துள்ளார்.



அவ்வகையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய பொருளாளராக அகமது பட்டேல் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னர் இந்த பொறுப்பில் இருந்த மோத்திலால் வோரா, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நிர்வாக பொதுச் செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு விவகாரங்கள் துறை தலைவராக முன்னாள் மத்திய மந்திரி ஆனந்த் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் காரிய கமிட்டியின் நிரந்தர அழைப்பாளராக பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீரா குமார், அசாம் நீங்கலான வட-கிழக்கு மாநிலங்களின் பொதுச் செயலாளராக லுய்சின்ஹோ சாலேரியோ ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவராக இருந்த சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகராக இருக்கும் அகமது பட்டேல், இதற்கு முன்னரும் காங்கிரஸ் பொருளாளராக பொறுப்பு வகித்தவர் என்பது நினைவிருக்கலாம். #Congress #RahulGandhi #AhmedPatel

Tags:    

Similar News