செய்திகள்

ஒடிசாவில் பாலத்தில் நடந்து சென்ற கன்வர் யாத்ரீகர்கள் மீது ரெயில் மோதியது- 4 பேர் பலி

Published On 2018-08-13 15:55 IST   |   Update On 2018-08-13 15:55:00 IST
ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் உள்ள ரெயில்வே பாலத்தில் நடந்து சென்றபோது ரெயில் மோதியதில் கன்வர் யாத்ரீகர்கள் 4 பேர் உயிரிழந்தனர். #KanwarYatra #OdishaAccident #Kanwariyas
புவனேஸ்வர்:

வட இந்தியாவில் ஆண்டு தோறும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கன்வர் யாத்திரை நடைபெறும். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள, கங்கோத்ரியின் கோ முக் மற்றும் ஹரித்துவாரில் இருந்து கங்கை நீரை எடுத்து சொந்த ஊருக்கு கொண்டு வந்து சிவன் கோவிலில் அமாவாசை அல்லது சிவராத்திரி அன்று அபிஷேகம் செய்வது தான், இந்த யாத்திரையின் முக்கிய அம்சம். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான கன்வர் யாத்திரை தொடங்கி நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி ஏந்தி யாத்திரை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், காவடி ஏந்தி புனித நீர் எடுத்து வந்த யாத்ரீகர்கள், ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் உள்ள வேதவியாசர் கோவிலில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் செய்வதற்காக சென்றுகொண்டிருந்தனர். அப்போது விரைவாக கோயிலை சென்றடைவதற்காக பன்போஷ் ரெயில் நிலையம் அருகே உள்ள பிராமணி ரெயில்வே பாலத்தின் வழியாக சென்றனர்.


அப்போது அந்த வழியாக வந்த ரெயில் அவர்கள் மீது மோதியது. இதில் 7 பேர் ரெயிலில் அடிபட்டு பிராமணி ஆற்றில் விழுந்தனர். இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உள்பட 4 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் 3 பேரின் உடல்கள் உடனடியாக மீட்கப்பட்டன. ஒருவரின் உடலை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். #KanwarYatra #OdishaAccident #Kanwariyas
Tags:    

Similar News