செய்திகள்

சத்தீஸ்கரில் பேருந்து எரிப்பு - தண்டவாளங்களை சேதப்படுத்தி நக்சல்கள் அட்டூழியம்

Published On 2018-08-09 01:29 IST   |   Update On 2018-08-09 01:29:00 IST
சத்தீஸ்கர் மாநிலத்தில் பேருந்து மற்றும் லாரியை எரித்து சேதப்படுத்திய நக்சல்கள், தண்டவாளத்தையும் சேதப்படுத்தி உள்ளனர். #NaxalAttack
ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலம் நக்சல்கள் பாதிப்பு அதிகமுள்ள பகுதியாகும். அதனால் இங்கு நக்சல்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவது வழக்கம்.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தின் கமவாடா பகுதியில் சாலையில் சென்ற பேருந்து மற்றும் லாரியை சிறைபிடித்த நக்சல்கள் அவற்றுக்கு தீ வைத்து எரித்தனர்.

மேலும், தண்டேவாடா பகுதியில் தண்டவாளங்களை சேதப்படுத்தினர். இதனால் அந்த வழியாக சென்ற பயணிகள் ரெயில் தடம் புரண்டது.

தகவலறிந்து அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்றனர். நக்சல்களை தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News