செய்திகள்

காஷ்மீரில் ரூ.300 கோடி மதிப்புள்ள ஹெராயின் பிடிபட்டது

Published On 2018-08-06 17:13 IST   |   Update On 2018-08-06 17:13:00 IST
காஷ்மீரின் ஜம்மு மாவட்டத்தில் ரூ.300 கோடி மதிப்புள்ள ஹெராயினை இன்று பறிமுதல் செய்த போலீசார் இரு குற்றவாளிகளை கைது செய்தனர். #heroinsmuggling #Rs300crheroin
ஜம்மு:

ஜம்மு மாவட்டத்தின் பத்தின்டி பகுதி வழியாக சிலர் போதைப்பொருட்களை கடத்தி செல்லப் போவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைதொடர்ந்து, சந்தேகத்தின்பேரில் போலீசார் இருவரை மடக்கி பரிசோதனை செய்தபோது அவர்கள் சுமார் 50 கிலோ ஹெராயின் வைத்திருப்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் குர்ஜீத் சிங், ரவிக்குமார் ஆகியோரை கைது செய்த போலீசார் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயினை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். #heroinsmuggling  #Rs300crheroin
Tags:    

Similar News