செய்திகள்

மராட்டியத்தில் மாநகராட்சி மேயரான ஆட்டோ ரிக்‌ஷா டிரைவர்

Published On 2018-08-05 05:35 GMT   |   Update On 2018-08-05 05:35 GMT
மராட்டியத்தில் மாநகராட்சி மேயர் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட ஆட்டோ டிரைவர் வெற்றி பெற்றார்.
மும்பை:

மராட்டிய மாநிலத்தில் உள்ள பிம்ப்ரி சிஞ்ச்வாட் மாநகராட்சியில் மேயர் தேர்தல் நடந்தது. அதில் பா.ஜனதா கட்சி சார்பில் ராகுல் ஜாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் வினோத் நாதேவும் போட்டியிட்டனர்.

இந்த நிலையில் நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. மொத்தம் 128 கவுன்சிலர்களில் 120 பேர் மட்டுமே வாக்களித்தனர். 7 பேர் நடுநிலை வகித்தனர்.

வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதில் பா.ஜனதா வேட்பாளர் ராகுல் ஜாதவ் அமோக வெற்றி பெற்றார். அவர் 80 வாக்குகள் பெற்று இருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வினோத் நாதேவுக்கு 33 வாக்குகளே கிடைத்தது.

பிம்ப்ரி சிஞ்ச்வாட் மாநகராட்சியின் 25-வது மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் ஜாதவ் ஆட்டோ டிரைவராக இருந்தவர். மேயர் ஆன பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“இது தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. தொழிலாளியான எனக்கு அவர்களின் பிரச்சினைகள் தெரியும். எனவே அவர்களின் நலனுக்காக பாடுபடுவேன். நகர வளர்ச்சிக்கு கடுமையாக உழைப்பேன்” என்றார்.

துணைமேயர் தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் சச்சின் சிஞ்ச்வாட் வென்றார். இவருக்கு 79 ஓட்டுகள் கிடைத்தன. எதிர்த்து போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் தாப்கீர் காட் 32 ஓட்டுகள் பெற்றார்.
Tags:    

Similar News