செய்திகள்

3 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி - அகிலேஷ் யாதவ் திட்டம்

Published On 2018-07-29 07:37 GMT   |   Update On 2018-07-29 07:37 GMT
மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #Congress #SamajwadiParty
லக்னோ:

மத்தியில் பா.ஜனதாவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க காங்கிரஸ் எதிர்க்கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி ஜனதா, சரத்யாதவ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கனவே ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாடி கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது.


இதில் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரம் கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு வழங்கப்பட்டது. பின்னர் கட்சியின் முதன்மை பொதுச் செயலாளர் ராம்கோபால் யாதவ் கூறுகையில், இந்த கூட்டத்தில் காங்கிரசுடனான கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட மற்ற மூத்த தலைவர்கள் கூறுகையில், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க தயாராக இருக்கிறோம்.

கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்த திறந்த மனதுடன் இருக்கிறோம். இந்த 3 மாநிலங்களிலும் காங்கிரஸ்தான் பிரதான எதிர்க்கட்சி என்பதால் அந்த கட்சிக்கே பேச்சு நடத்த முன்னுரிமை அளிக்கிறோம் என்றனர். #AssemblyElection #Congress #AkhileshYadav #SamajwadiParty
Tags:    

Similar News