செய்திகள்

பசு இறைச்சி தின்பதை நிறுத்தினால் குற்றங்கள் குறையலாம் - ஆர்.எஸ்.எஸ். கருத்து

Published On 2018-07-24 14:51 IST   |   Update On 2018-07-24 14:51:00 IST
பசு இறைச்சி தின்பதை மக்கள் நிறுத்தினால் குற்றங்கள் குறையலாம் என ஆர்.எஸ்.எஸ். செயற்குழு தலைவர் குறிப்பிட்டுள்ளார். #RSSleaderIndreshKumar #Cowslaughter
ராஞ்சி:

ஆர்.எஸ்.எஸ். செயற்குழு தலைவர் இந்திரேஷ் குமார் ஜார்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சியில் நடைபெற்ற ஹிந்து ஜகரான் மன்ச் அமைப்பின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

சமீபத்தில் இதே மாநிலத்தில் சாமியார் அக்னிவேஷ் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பால கருத்து தெரிவித்த இந்திரேஷ் குமார், அவர் தாக்கப்பட்டது தவறானது, கண்டனத்துக்குரியது. ஆனாலும், கருத்து சுதந்திரம் என்னும் பெயரில் பிறரின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் பேச யாருக்கும் உரிமை இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.



நாடு முழுவதும் கும்பலாக சேர்ந்து சிலர் அடித்துக் கொல்லப்படும் சம்பவங்களும் கண்டனத்துக்குரியது. பசுக்கள் கொல்லப்படுவதை எந்த மதமும் ஏற்றுக்கொள்ளவில்லை. பசுக்கறி உண்ணும் பழக்கம் நிறுத்தப்பட்டால் சாத்தானால் ஏவப்படும் ஏராளமான குற்றங்கள் நின்றுவிடக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார். #RSSleaderIndreshKumar #Cowslaughter
Tags:    

Similar News