செய்திகள்

என்ஜினீயரிங் கலந்தாய்வு ஆகஸ்ட் 31-ந்தேதி வரை நீட்டிப்பு - சுப்ரீம் கோர்ட்டு

Published On 2018-07-20 08:06 GMT   |   Update On 2018-07-20 08:06 GMT
என்ஜினீயரிங் கலந்தாய்வு நடத்த கால அவகாசம் கோரி அண்ணா பல்கலைக்கழகம் தொடர்ந்த வழக்கில் கால அவகாசத்தை ஆகஸ்ட் 31-ந் தேதி வரை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. #EngineeringCounseling #AnnaUniversity #SC
புதுடெல்லி:

தமிழகத்தில் மருத்துவ கவுன்சிலிங்கை தொடர்ந்து என்ஜினீயரிங் கலந்தாய்வு நடைபெறுவது வழக்கம். ஜூலை இறுதிக்குள் என்ஜினீயரிங் கலந்தாய்வு முடிந்து ஆகஸ்ட் முதல் வாரத்தில் வகுப்புகள் தொடங்கப்படும்.

இந்த ஆண்டு நீட் தேர்வு குளறுபடி காரணமாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கருணை மதிப்பெண் வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் மருத்துவ கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாக என்ஜினீயரிங் கலந்தாய்வும் தாமதமானது.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக் கழகம் என்ஜினீயரிங் கலந்தாய்வை நடத்தி முடிக்க ஆகஸ்ட் 31-ந்தேதி வரை கால அவகாசம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது என்ஜினீயரிங் கலந்தாய்வை ஆகஸ்ட் 31-ந் தேதி வரை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. #EngineeringCounseling #AnnaUniversity #SC

Tags:    

Similar News