செய்திகள்

கலவரத்தை தூண்ட திட்டம் என்றால் உள்துறை மந்திரியிடம் சொல்லுங்கள் - ராணுவ மந்திரிக்கு சிதம்பரம் பதிலடி

Published On 2018-07-14 23:32 GMT   |   Update On 2018-07-14 23:32 GMT
கலவரத்தை தூண்ட திட்டம் என்றால் உள்துறை மந்திரியிடம் சொல்லுங்கள் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு தெரிவித்துள்ளார். #Chidambaram #Sitharaman
புதுடெல்லி:

ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், டெல்லியில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், “காங்கிரஸ் கட்சி முஸ்லிம் ஆதரவு கட்சியாக மாற முயற்சிக்கிறது, மதத்தை வைத்து காங்கிரஸ் அபாயகரமாக விளையாட்டு விளையாடுகிறது. 1947 பிரிவினைவாதம், மதக் கலவரம் என்று கூறி மக்களை அச்சுறுத்தி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் சமுதாய நல்லிணக்கத்துக்கு பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு காங்கிரசே பொறுப்பு” என்று கூறினார்.

இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பதிலடி கொடுத்து டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

அதில் அவர், “நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாட்டில் கலவரங்களைத் தூண்ட திட்டங்கள் தீட்டப்படுகின்றன என்று ராணுவ மந்திரி சொல்கிறார். இது தொடர்பான ரகசிய தகவல்களை அவர் உள்துறை மந்திரியிடம் தெரிவிக்க வேண்டும்” என்று கூறி உள்ளார்.

மேலும், “பாகிஸ்தானை அடக்கி விட்டு, பயங்கரவாதத்தை ஒழித்து விட்டு, எல்லை தாண்டிய ஊடுருவல்களை தடுத்து நிறுத்தி விட்டு, ரபேல் போர் விமானங்கள் வாங்கி விட்டு இப்போது ராணுவ மந்திரிக்கு அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்களின் மத சார்புகளை பற்றி விசாரிப்பதற்கு நேரம் இருக்கிறது” என்றும் சாடி உள்ளார்.  #Chidambaram #Sitharaman #tamilnews 
Tags:    

Similar News