செய்திகள்

ஹஜ் யாத்திரைக்கான முதல் குழு புறப்பட்டது - டெல்லியில் நக்வி வழியனுப்பி வைத்தார்

Published On 2018-07-14 16:11 IST   |   Update On 2018-07-14 16:11:00 IST
இந்த ஆண்டுக்கான ஹஜ் புனித யாத்திரையின் முதல் குழு இன்று புறப்பட்டது. அவர்களை மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி வழியனுப்பி வைத்தார். #HajjPilgrims
புதுடெல்லி:

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரது கடமைகளில் ஒன்றாக ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் இந்த புனித யாத்திரையை மேற்கொள்கின்றனர்.

அதன்படி இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்கான முதல் குழு டெல்லியில் இருந்து இன்று கிளம்பியது. அவர்களை மத்திய சிறுபான்மை நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி வழியனுப்பி வைத்தார். இந்த நிகழ்வில் டெல்லியின் போக்குவரத்துத்துறை மந்திரி கைலாஷ் கெலாட், இந்திய ஹஜ் கமிட்டியின் தலைவர் சவுத்ரி மெஹ்பூப் அலி கைஸெர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



இந்த வருட யாத்திரைக்கு டெல்லியில் இருந்து இன்று 1200 யாத்ரீகர்கள் இன்று புறப்பட்டு செல்கின்றனர். இந்த குழுவில் டெல்லி மட்டுமன்றி, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் யாத்ரீகர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த வருடம் 1,75,025 பேர் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதாகவும், சுமார் 47 சதவிகித பெண்கள் எவருடைய துணையும் இன்றி இந்த வருடம் யாத்திரை மேற்கொள்ள இருப்பதாகவும் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். #HajjPilgrims
Tags:    

Similar News