செய்திகள்

உ.பி. முன்னாள் முதல்-மந்திரி என்.டி.திவாரி கவலைக்கிடம்

Published On 2018-07-11 07:03 GMT   |   Update On 2018-07-11 07:03 GMT
உத்தரபிரதேசம், உத்ரகாண்ட் மாநிலங்களின் முன்னாள் முதல்-மந்திரியான என்.டி.திவாரியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. #Congress #NTTiwari
புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் என்.டி.திவாரி.

உத்தரபிரதேசம், உத்ரகாண்ட் மாநிலங்களின் முன்னாள் முதல்-மந்திரியான இவர், ஆந்திர மாநில கவர்னராகவும் பதவி வகித்துள்ளார். 92 வயதான என்.டி.திவாரி பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார்.

இதற்கு சிகிச்சை பெறுவதற்காக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வருடம் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில தினங்களாக அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது.

தற்போது என்.டி.திவாரியின் உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உத்ரகாண்ட் மாநில முதல்-மந்திரி திரிவேந்திர ராவத் ஆஸ்பத்திரிக்கு சென்று திவாரி உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டு அறிந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

என்.டி.திவாரியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவரது உடல் உறுப்புகளில் பல செயல் இழந்து விட்டன. அரசியலில் எனக்கு குரு போன்றவர். நமது பிரார்த்தனை மட்டுமே அவரை காப்பாற்ற முடியும்.

இவ்வாறு திரிவேந்திர ராவத் தெரிவித்தார். #Congress #NTTiwari
Tags:    

Similar News