செய்திகள்

தமிழகத்துக்கு கூடுதலாக நீர் திறக்க குமாரசாமி உத்தரவு

Published On 2018-07-10 07:24 GMT   |   Update On 2018-07-10 07:24 GMT
கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் நீரை தமிழகத்துக்கு திறக்க வேண்டும் என்று நீர்ப்பாசன அதிகாரிகளுக்கு கர்நாடக முதல்- மந்திரி குமாரசாமி இன்று உத்தரவிட்டு உள்ளார்.
பெங்களூரு:

காவிரியின் குறுக்கே உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

இதில் மைசூரு, மாண்டி மாவட்ட விவசாயிகளுக்கு போக 40 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. அதிக அளவில் நீர் திறக்கப்பட்டு உள்ளதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு பாதுகாப்பான இடங்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக உள்ளதால் கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் நீரை தமிழகத்துக்கு திறக்க வேண்டும் என்று நீர்ப்பாசன அதிகாரிகளுக்கு கர்நாடக முதல்- மந்திரி குமாரசாமி இன்று உத்தரவிட்டு உள்ளார்.

ஆனால் எவ்வளவு நீர் திறக்கப்பட வேண்டும் என்று அவர் அறிவிக்கவில்லை. என்றாலும் இன்று மாலை முதல் மேலும் நீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #CauveryWater #Cauveryissue
Tags:    

Similar News