செய்திகள்

காஷ்மீரின் முதல் மந்திரியாக முஸ்லிம் இருக்க கூடாது - சுப்ரமணியசாமி திடீர் போர்கொடி

Published On 2018-07-09 08:53 GMT   |   Update On 2018-07-09 08:53 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதல் மந்திரியாக இனி முஸ்லிம் இருக்க கூடாது என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியசாமி வலியுறுத்தியுள்ளார். #HinduCMinKashmir #SubramanianSwamy
புதுடெல்லி:

பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்திய விடுதலைக்கு பின்னர் முஸ்லிம் தலைவர்கள் மட்டும் தான் முதல் மந்திரிகளாக பதவி வகித்து வந்துள்ளனர்.

பரூக் அப்துல்லா, அவரது மகன் உமர் அப்துல்லா, முப்தி முகமது சயீத், அவரது மகள் மெகபூபா முப்தி என சமீபகாலமாக காஷ்மீர் அரசியலில் முஸ்லிம் தலைவர்களின் பெயர்கள் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறது.

மெகபூபா முப்தி தலைமையிலான பி.டி.பி. கூட்டணி ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ.க. வாபஸ் பெற்ற பின்னர் தற்போது அங்கு கவர்னர் வோரா தலைமையில் ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதல் மந்திரியாக இனி முஸ்லிம் இருக்க கூடாது என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியசாமி இன்று வலியுறுத்தியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முஸ்லிம்களை முதல் மந்திரிகளாக நியமிப்பது நேரு காலத்தில் திணிக்கப்பட்ட மரபு. இன்றளவும் அந்த மரபை கடைபிடிப்பதை ஏற்றுகொள்ள முடியாது. காஷ்மீரின் முதல் மந்திரியால இந்து இருக்க வேண்டும்.

பி.டி.பி. கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்படும் ஒரு இந்துவையோ, சீக்கியரையோ நாம் முதல் மந்திரி பதவியில் அமர்த்தலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். #HinduCMinKashmir #SubramanianSwamy
Tags:    

Similar News