செய்திகள்

பாடகரின் தந்தைக்கு பளார் - வினோத் காம்ளி மற்றும் அவரது மனைவி மீது வழக்குப்பதிவு

Published On 2018-07-02 18:20 IST   |   Update On 2018-07-02 18:20:00 IST
பிரபல பாடகரின் தந்தையை அறைந்த விவகாரத்தில் கிரிக்கெட் விரர் வினோத் காம்ளி மற்றும் அவரது மனைவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பை :
 
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான வினோத் காம்ளி, அவரது மனைவி ஆன்ரியா ஹேவித் மற்றும் குழந்தைகள் சகிதமாக மும்பையில் உள்ள வணிக வளாகம் ஒன்றிற்கு நேற்று சென்றிருந்தனர். அங்கு, பிரபல இந்தி பாடகர் அன்கித் திவாரியின் தந்தை, ஆன்ரியா ஹேவித்தை கடந்து செல்கையில் திடீர் என அவரை ஆன்ரியா கன்னத்தில் அறைந்தார்.

இதைத்தொடந்து, இருதரப்பிற்கும் வாக்குவாதம் முற்றி அன்கித் திவாரியின் தந்தை மற்றும் சகோதரர்களிடம் வினோத் காம்ளி கைக்கலப்பில் ஈடுபட்டார்.

இதுதொடர்பான, சிசிடிவி காட்சிகள் இன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வினோத் காம்ளி மற்றும் ஆன்ரியா ஹேவித் மீது அன்கித் திவாரியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காம்ளி மற்றும் ஆன்ரியா மீது மும்பை போலீசார் இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும், தன்னிடம் தவறான முறையில் நடந்துகொண்டதோடு அல்லாமல் அருவறுக்கத்தக்க வார்த்தையில் பேசியதால் அன்கித் திவாரியின் தந்தையை தாக்கினேன். அவரை நான் தாக்கியது சரியான நடவடிக்கை, காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுளது என ஆன்ரியா தெரிவித்துள்ளார்.

சிசிடிவி காட்சியில் அன்கித் திவாரியின் தந்தை ஆன்ரியாவின் அருகே மிக சாதாரணமாக கடந்து சென்றது போன்றே தெரிகிறது. ஆனாலும், திடீரென ஆன்ரியா அவரை தாக்கினார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News