செய்திகள்

ஆதார் அட்டை மூலம் உடனடியாக பான் எண் - புதிய திட்டம் அறிமுகம்

Published On 2018-07-01 14:56 IST   |   Update On 2018-07-01 14:56:00 IST
வருமான வரி நிரந்தர கணக்கு எண் இல்லாதவர்களுக்கு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி மூலம் உடனடியாக பான் எண்ணைப் பெறும் புதிய திட்டம் அறிமுகமாகியுள்ளது. #ITdept #instantAadhaarbasedPAN
புதுடெல்லி:

’பான் எண்’ எனப்படும் வருமான வரி கணக்கு நிரந்தர எண் இல்லாதவர்கள் முகவர்கள் மூலமாகவோ, அலுவலகத்திலோ மனு செய்து காத்திருக்க வேண்டியுள்ளது.

இந்த சிரமத்தை குறைக்கும் வகையில் உங்களின் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி மூலமாக  உடனடியாக பான் எண்ணைப்  பெறும் புதிய திட்டம் அறிமுகமாகியுள்ளது.

உங்கள் கைபேசி மூலம் ஆன்லைன் வழியாக பதிவு செய்தால் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய கடவு சொல்லின் (ஒன் டைம் பாஸ்வேர்ட்) மூலம் சரிபார்ப்பு முடிந்து உங்களுக்கான வருமான வரி நிரந்தர கணக்கு எண் கைபேசி வழியாக வந்துசேரும்.

முன்னதாக, உங்களது ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர், வயது, பாலினம் மற்றும் முகவரி பான் கார்டிலும் இணைக்கப்படும். இந்த சலுகை தனிநபர் வருமான வரி கணக்கு தொடங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

அறக்கட்டளைகள், நிறுவனங்கள், மற்றும் இந்து கூட்டு குடும்பம் போன்ற இதர பிரிவினருக்கு இந்த சலுகை பொருந்தாது என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைபேசி மூலம் கிடைத்த வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை நீங்கள் பயன்படுத்த ஆரம்பித்த பின்னர் பான் கார்ட் எனப்படும் அடையாள அட்டை விரைவில் தபால் மூலம் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த சலுகை முதலில் வருபவர்கள் - முதலில் பெறுபவர்கள் என்னும் அடிப்படையில் அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு.. https://www.incometaxindiaefiling.gov.in.

#ITdept  #instantAadhaarbasedPAN
Tags:    

Similar News