செய்திகள்

ஐதராபாத்தில் யுனைடெட் அரபு எமிரேட்ஸ் தூதரகம் திறக்கப்படும் - தெலங்கானா அரசு

Published On 2018-06-29 15:07 IST   |   Update On 2018-06-29 15:07:00 IST
தெலங்கானாவில் உள்ள ஐதராபாத்தில் யுனைடெட் அரபு எமிரேட்ஸ் நாட்டின் தூதரகம் விரைவில் திறக்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #UAEConsulate #Hyderabad
ஐதராபாத்:

யுனைடெட் அரபு எமிரேட்சின் வெளியுறவு துறை மந்திரி ஷேக் அப்துல்லா பின் சையத் அல் நயன் கடந்த 24ம் தேதி முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இவர் மும்பை, அகமதாபாத், சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். 

இந்நிலையில், தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் முதல் மந்திரி சந்திரசேகர் ராவை யுனைடெட் அரபு எமிரேட்சின் வெளியுறவு துறை மந்திரி ஷேக் அப்துல்லா பின் சையத் அல் நயன் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.



இதுதொடர்பாக முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், யு.ஏ.இ. நாட்டின் வெளியுறவு துறை மந்திரி ஷேக் அப்துல்லாவுடன் முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து ஐதராபாத்தில் யுனைடெட் அரபு எமிரேட்ஸ் நாட்டின் தூதரகம் விரைவில் திறக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளது. #UAEConsulate #Hyderabad
Tags:    

Similar News