செய்திகள்

பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை - தேசிய மகளிர் ஆணையம் விசாரணை

Published On 2018-06-27 15:01 GMT   |   Update On 2018-06-27 15:01 GMT
கேரளாவில் பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணுக்கு 5 பாதிரியார்கள் பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில், விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அதனை வீடியோ பதிவு செய்த பாதிரியார் ஒருவர், மற்ற பாதிரியார்களும் இந்த தகவலை கூறியுள்ளார். இதனால் அவர்களும் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் தற்போது வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஐந்து பாதிரியார்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு பாலியல் குற்றச்சாட்டு உண்மை என்று தெரியவந்தால் அவர்கள் மீது முறைப்படி போலீசில் புகார் செய்யப்படும் என்றும் சர்ச் நிர்வாகம் அறிவித்து உள்ளது. 

இதற்கிடையே, தேசிய மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அம்மாநில டி.ஜி.பி.யை தேசிய மகளிர் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
Tags:    

Similar News