செய்திகள்

பயிர்க்கடன் வழங்க விவசாயி மனைவியை ஆசைக்கு இணங்க அழைத்த வங்கி அதிகாரி

Published On 2018-06-24 07:27 GMT   |   Update On 2018-06-24 07:27 GMT
பயிர் கடன் வழங்க விவசாயி மனைவியை ஆசைக்கு இணங்க வங்கி அதிகாரி அழைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை:

மராட்டிய மாநிலம் புல்தானா மாவட்டம் டடாலா கிராமத்தில் உள்ள சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் மானேஜர் ஆக பணிபுரிபவர் ராஜேஷ் ஹிவாஸ். அப்பகுதியை சேர்ந்த ஒரு விவசாயி பயிர் கடன் கேட்டு இவரது வங்கியில் விண்ணப்பித்து இருந்தார்.

ஆனால் அவருக்கு கடன் வழங்காமல் மானேஜர் ராஜேஷ் ஹிவாஸ் இழுத்தடித்தார். எனவே விவசாயியின் மனைவி அவரை சந்தித்து பயிர் கடன் வழங்கும்படி கோரிக்கை விடுத்தார்.

அவரைப் பார்த்ததும் மானேஜர் ராஜேஷ் சபலம் அடைந்தார். கடன் வழங்க வேண்டுமானால் என்னுடன் ‘செக்ஸ்’சில் ஈடுபட வேண்டும் என அழைத்தார். அதற்கு அவரது பியூன் மனோஜ்சவான் (37) என்பவரும் உடந்தையாக இருந்தார்.

இதுகுறித்து புல்தானா மாவட்ட கலெக்டர் நிரூபமா டாங்கேவிடம் விவசாயியின் மனைவி புகார் செய்தார். அதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில் கலெக்டர் நேரடியாக தலையிட்டு வங்கி மானேஜர் மற்றும் பியூன் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார்.

அதைத் தொடர்ந்து பியூன் மனோஜ் சவான் தர்யாபூர் கிராமத்தில் கைது செய்யப்பட்டார். வங்கி மானேஜர் ராஜேஷ் ஹிவாஸ் தலைமறைவாக இருக்கிறார். அவரை கைது செய்ய வார்தா மற்றும் நாக்பூருக்கு போலீஸ் குழு அனுப்பப்பட்டுள்ளது.

சம்பவத்துக்கு காங்கிரஸ் தலைவர் அசோக்சவான் அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்துள்ளார். #tamilnews

Tags:    

Similar News