செய்திகள்

கவர்னர் ஆட்சிக்கு துணையாக காஷ்மீருக்கு புதிய தலைமை செயலாளர் நியமனம்?

Published On 2018-06-20 09:36 GMT   |   Update On 2018-06-20 09:36 GMT
காஷ்மீர் மாநிலத்தில் கவர்னர் ஆட்சி அமலில் உள்ள நிலையில் சத்தீஸ்கர் மாநில உள்துறை கூடுதல் செயலாளர் சுப்ரமணியம், காஷ்மீரின் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது. #BJPDumpsPDP #JKGovernorRule #BVRSubrahmanyam

ஜம்மு:

காஷ்மீர் மாநிலத்தில் சமீபகாலமாக ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து மோதல் இருந்து வந்த நிலையில், நேற்று பகிரங்கமாக வெடித்தது. மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பா.ஜ.க. அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பின்னர் தனது முதல் மந்திரி பதவியை மெகபூபா முப்தி உடனடியாக ராஜினாமா செய்தார். ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கப்போவதில்லை என்று பா.ஜ.க.வும் அறிவித்தது.

இதையடுத்து அம்மாநில கவர்னரின் பரிந்துரையை ஏற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இன்று முதல் ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தில் கவர்னர் ஆட்சி அமலில் உள்ள நிலையில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுப்ரமணியம் (55) காஷ்மீரின் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது. அவர் தற்போது சத்தீஸ்கர் மாநில உள்துறை கூடுதல் செயலாளராக உள்ளார்.  #BJPDumpsPDP #JKGovernorRule #BVRSubrahmanyam
Tags:    

Similar News