செய்திகள்

நில தகராறில் பெண்ணை நெஞ்சில் எட்டி உதைத்த தெலுங்கானா அதிகாரி கைது

Published On 2018-06-18 16:18 IST   |   Update On 2018-06-18 16:18:00 IST
தெலுங்கானா மாநிலத்தில் நிலப்பிரச்சனை காரணமாக செருப்பால் அடித்த பெண்ணை நெஞ்சில் எட்டி உதைத்த அதிகாரியை போலீசார் இன்று கைது செய்தனர். #LandDispute
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இம்மாடி கோபி. இவர் கிராமத்தலைவராக உள்ளார். கோபி தனது நிலத்தை 10 மாதங்களுக்கு முன் ஒரு பெண்ணுக்கு 33 லட்சம் ரூபாய்க்கு விற்றார். பணத்தை கொடுத்த பின்பும் கோபி நிலத்தை கொடுக்காமல் இருந்துள்ளார்.

இதனால் அந்த பெண்ணின் குடும்பத்தாருக்கும், கோபிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தற்போது நிலத்தின் விலை அதிகரித்து விட்டது. அதனால் மேலும் 50 லட்சம் ரூபாய் தர வேண்டும் என கோபி கூறியுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த அந்த பெண் கோபியை செருப்பால் அடித்தார். இது கோபிக்கு அதிக கோபத்தை ஏற்படுத்தியது. அவர் அந்த பெண்ணை நெஞ்சில் மிதித்து எட்டி உதைத்தார். சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில், அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை இன்று கைது செய்தனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோபியுன் அந்த பெண் குடும்பத்தார் மீது புகார் அளித்துள்ளார். #LandDispute

Tags:    

Similar News