செய்திகள்

டெல்லியில் வரும் 17-ம் தேதி வரை கட்டுமான பணிகளுக்கு தடை - ஆளுநர் உத்தரவு

Published On 2018-06-14 16:39 GMT   |   Update On 2018-06-14 16:39 GMT
டெல்லியில் கடுமையான சுற்றுச்சூழல் மாசு நிலவுவதால் வரும் 17-ம் தேதி வரை கட்டுமான பணிகளுக்கு தடை விதித்து ஆளுநர் அனில் பைஜால் உத்தரவிட்டுள்ளார்.
புதுடெல்லி:

புழுதிப் புயல் காரணமாக டெல்லியில் காற்று மாசு மீண்டும் அபாயகர நிலைக்கு சென்றுள்ளது. ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அவ்வப்போது புழுதிப் புயல் வீசிவருகிறது. இதன் காரணமாக டெல்லியில் தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 8 மடங்கு மாசு அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் இன்னும் சில நாட்களுக்கு மாசு நீடிக்கும் என்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், டெல்லியில் கடுமையான சுற்றுச்சூழல் மாசு நிலவுவதால் வரும் 17-ம் தேதி வரை கட்டுமான பணிகளுக்கு தடை விதித்து ஆளுநர் அனில் பைஜால் உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News