செய்திகள்

கேரளாவில் காற்றில் பறந்து வந்த 500 ரூபாய் நோட்டுகள்

Published On 2018-06-06 04:18 GMT   |   Update On 2018-06-06 04:18 GMT
கேரள மாநிலம் கொல்லம் அருகே காற்றில் பறந்த வந்த 500 ரூபாய் நோட்டுகளை போட்டி போட்டு பொதுமக்கள் எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவனந்தபுரம், ஜூன். 6-

கேரள மாநிலம் கொல்லம் அருகே சாத்தனூர் பாரிப் பள்ளி என்ற இடம் உள்ளது. சம்பவத்தன்று மாலை இந்த வழியாக ஏராளமான பொது மக்கள் இருசக்கர வாகனங் கள் மற்றும் பஸ்கள் மூலம் பயணம் செய்து கொண்டிருந் தனர்.

அப்போது திடீரென்று அந்த பகுதியில் காற்றில் பேப்பர் துண்டுகள் பறந்து வந்தன. இவை சாலைகளில் விழுந்தன. அந்த வழியாக நடந்து சென்ற சிலர் அதை எடுத்து பார்த்தபோது, அவர் களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த பேப்பர் துண்டுகள் அனைத்தும் 500 ரூபாய் நோட்டுகளாகும். அதுவும் தற்போது புழக்கத்தில் உள்ள புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் என்பது தெரிய வந்தது.

இதைப்பார்த்ததும் பொது மக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு சாலையில் பறந்த ரூபாய் நோட்டுக்களை எடுக்கத் தொடங்கினார்கள். இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும் வாகனங் களை ஆங்காங்கே நடுவழி யில் நிறுத்தி விட்டு ரூபாய் நோட்டுக்களை சேகரித்தனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. காற்றில் ரூபாய் நோட்டுக்கள் பறந்து வந்தது பற்றிய தகவல் கிடைத்ததும், போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் பொது மக்களை கட்டுப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குப் படுத்தும் முயற்சியில் ஈடுபட் டனர்.

மேலும் ரூபாய் நோட்டுக் களை சேகரித்தவர்களிடம் இருந்து அவற்றை வாங்கி போலீசார் அவை கள்ள நோட்டுக்களாக இருக்குமா? என்று சோதனை செய்து பார்த்தனர். அப்போது அவை நல்ல நோட்டுக்கள் என்பது தெரிய வந்தது. போலீசாரை பார்த்ததும் ரூபாய் நோட்டுக்களை எடுத் தவர்கள் அங்கிருந்து நைசாக நழுவிச்சென்று விட்டனர்.

வாகனத்தில் யாராவது ரூபாய் நோட்டுக்களை எடுத்துச் சென்றபோது கவனக்குறைவு காரணமாக அவை காற்றில் பறந்திருக்க லாம் என்று கருதப்படுகிறது. சாலையில் ரூபாய் நோட் டுக்கள் பறந்தது எப்படி? யார் ரூபாய் நோட்டுக்களை பறக்க விட்டது என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News