செய்திகள்

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல் - காஷ்மீரில் 27 ஆயிரம் கிராம மக்கள் பாதிப்பு

Published On 2018-06-04 08:31 GMT   |   Update On 2018-06-04 08:31 GMT
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலால், 31 கிராம மக்கள் மற்றும் 27 ஆயிரம் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. #JammuKashmir
ஜம்மு:

புனித ரமலான மாதத்தில் காஷ்மீர் மண்ணில் ரத்தம் சிந்த வேண்டாம் என்ற எண்ணத்தில் இந்திய ராணுவம் தனது நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளது.

ஆனால் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஷ்மீர் எல்லையில் தாக்குதல் நடத்தி அமைதிக்கு பங்கம் விளைவித்து வருகிறது.

எல்லை கட்டுப்பாட்டு பகுதியையொட்டி அமைந்துள்ள பிரக்வால், கானாசக், கோர் ஆகிய பகுதிகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 2 இந்திய வீரர்கள் பலியானார்கள். பொதுமக்கள் காவல்துறை அதிகாரிகள் உள்பட 13 பேர் காயம் அடைந்துள்ளளர். இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது.

பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலால் காஷ்மீர் எல்லையில் 27 ஆயிரம் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து ஜம்மு போலீஸ் உதவி கமி‌ஷனர் அருண்மனாஸ் கூறியதாவது:-

பாகிஸ்தான் ராணுவம் மார்க், கோர் பகுதிகளில் நடத்திய அத்துமீறல் தாக்குதலில் 31 கிராம மக்கள் மற்றும் 27 ஆயிரம் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. அவர்கள் தங்குவதற்கு மாற்று இடம் தயார் செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #JammuKashmir
Tags:    

Similar News