செய்திகள்

இலவச உணவு வழங்கும் ஆன்மிக தொண்டு நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. வரிச்சலுகை

Published On 2018-06-02 07:45 IST   |   Update On 2018-06-02 07:45:00 IST
பக்தர்கள், பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்கி வரும் ஆன்மிக தொண்டு நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. வரிச்சலுகை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. #GSTTax
புதுடெல்லி:

எவ்வித பாகுபாடும் இல்லாமல், பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்கி வரும் ஆன்மிக தொண்டு நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. (சரக்கு, சேவை வரி) சலுகை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ‘சேவா போஜ் யோஜனா’ என்ற புதிய திட்டத்தை மத்திய கலாசார அமைச்சகம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன்படி, இலவச உணவு வழங்கும் ஆன்மிக தொண்டு நிறுவனங்கள், மத்திய ஜி.எஸ்.டி., ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ஆகியவற்றில் இருந்து மத்திய அரசின் பங்காக கிடைக்கும் வரியை திரும்பப் பெறலாம். இதனால், அந்நிறுவனங்களின் நிதிச்சுமை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்துக்காக 2 நிதி ஆண்டுகளுக்கு ரூ.325 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. #GSTTax
Tags:    

Similar News