செய்திகள்

சத்தீஸ்கரில் நக்சலைட் துணை தளபதி, ஆதரவாளர்கள் உள்பட 3 பேரை போலீசார் சுட்டுக் கொன்றனர்

Published On 2018-05-29 14:11 IST   |   Update On 2018-05-29 14:11:00 IST
சத்தீஸ்கர் மாநிலம், ராஜ்நன்டகன் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் நக்சலைட் இயக்கத்தின் துணை தளபதி மற்றும் ஆதரவாளர்கள் இருவரை போலீசார் சுட்டுக் கொன்றனர். #Naxalencounter
ராய்ப்பூர்:

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கட்சிரோலி மாவட்டம் சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா மாநிலத்தை ஒட்டியுள்ள எல்லையில் உள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இதனால், சிறப்பு அதிரடிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், ராஜ்நன்டகன் மாவட்டத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தின் எல்லையை ஒட்டியுள்ள போர்டாலாவ் வனப்பகுதியில் இன்று காலை 11 மணியளவில் நக்சலைட்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்துள்ளது.

சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் நக்சலைட் துணை தளபதி ஆசாத் மற்றும் நக்சலைட்களுக்கு தேவையான பொருட்களை காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று கொடுக்கும் ஆதரவாளர்கள் இருவரும் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. #Naxalencounter 
Tags:    

Similar News