செய்திகள்

மேகாலயாவின் அம்பாதி சட்டசபை தொகுதியில் 91 சதவீதம் வாக்குப் பதிவாகி சாதனை

Published On 2018-05-29 00:09 GMT   |   Update On 2018-05-29 00:09 GMT
மேகாலயா மாநிலத்தின் அம்பாதி தொகுதியில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் 91 சதவீதம் வாக்குகள் பதிவாகி சாதனை படைத்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #AmbatiBypoll #Electioncommision
புதுடெல்லி:

உ.பி.யின் கைரானா உள்பட நான்கு மக்களவை தொகுதிகளுக்கும், மேகாலயா மாநிலத்தின் அம்பாதி உள்பட 10 சட்டசபை தொகுதிகளுக்கும் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது.

உத்தரப்பிரதேச மாநிலம் நூர்புர், மராட்டிய மாநிலம் பாலஸ் கடேகோன், பஞ்சாப் மாநிலம் ஷாகோட், பீகார் மாநிலம் ஜோகிகட், ஜார்கண்ட் மாநிலம் கோமியா, சில்லி, கேரள மாநிலம் செங்கானூர், மேகாலயா மாநிலம் அம்பாதி, உத்தரகாண்ட் மாநிலம் தாராளி, மேற்குவங்காள மாநிலம் மகேஷ்தலா ஆகிய 10 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது, இந்த 10 தொகுதிகளில் மேகாலயா மாநிலத்தின் அம்பாதி தொகுதியில் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் மட்டும் 90.4 சதவீதம் வாக்குகள் பதிவாகி சாதனை படைத்துள்ளது.

நேற்று நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை மறுதினம் நடைபெறுகிறது. அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். #AmbatiBypoll #Electioncommision
Tags:    

Similar News