செய்திகள்

அரசு பங்களாவை காலி செய்ய அவகாசம் கேட்டு முலாயம், அகிலேஷ் சுப்ரீம் கோர்ட்டில் மனு

Published On 2018-05-28 09:17 GMT   |   Update On 2018-05-28 09:17 GMT
உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர்களான முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகிய இருவரும் தாங்கள் வசிக்கும் அரசு பங்களாவை காலி செய்ய கால அவகாசம் வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
புதுடெல்லி:

உத்தரப்பிரதேசத்தில் கடந்த சமாஜ்வாதி கட்சி ஆட்சியின் போது முன்னாள் முதல்வர்களுக்கு அரசு பங்களா உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை கடந்த 7-ம் தேதி சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது. இதனை அடுத்து, முன்னாள் முதல்வர்கள் 15 நாட்களில் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என அம்மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியது.

முன்னாள் முதல்வர் மாயாவதி அரசு பங்களாவை காலி செய்து தனது கட்சிக்கு சொந்தமான பங்களாவுக்கு குடியேற உள்ளார். ஆனால், முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது மகன் அகிலேஷ் யாதவ் ஆகிய இருவரும் அரசு பங்களாவை காலி செய்ய மறுக்கின்றனர்.

பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட மற்றொரு வீடு கிடைப்பது கடினம் என்பதால் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு இருவரும் கடிதம் எழுதியிருந்தனர். ஆனால், மாநில அரசு அதற்கு பதிலளிக்காத நிலையில், இன்று இருவரும் இதே கோரிக்கையுடன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.  
Tags:    

Similar News