செய்திகள்

ஒடிசாவில் பாஜக அலுவலகத்தில் பட்டாசு வீசிய 2 பேர் கைது

Published On 2018-05-26 20:15 GMT   |   Update On 2018-05-26 20:15 GMT
பிரதமர் மோடி பாஜகவின் 4 ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய சிறிது நேரத்தில், ஒடிசா மாநில பாஜக அலுவலகத்தில் பட்டாசு வீசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். #4YearsOfModiGovt #NarendraModi #Firecrackers #BJPOffice
புவனேஷ்வர்:

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 26-5-2014 அன்று மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நிலையில் நேற்றுடன் இந்த அரசின் நான்காண்டு கால ஆட்சி நிறைவடைந்தது.

இதை முன்னிட்டு ஒடிசா மாநிலம், கட்டாக் நகரில் மகாநதி நதிக்கரையில் உள்ள பாலி ஜாத்ரா திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், 20 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடந்து கொண்டிருப்பது 4 ஆண்டு கால மத்திய அரசுக்கு மக்கள் தந்த அங்கீகாரம் என குறிப்பிட்டார். இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி அங்கிருந்து டெல்லி திரும்பினார்.



அவர் சென்ற சிறிது நேரத்தில் மாநில பாஜக அலுவலகத்தில் சிலர் பட்டாசுகளை வீசி சென்றனர். இதுதொடர்பாக, பாஜக அலுவலகத்தினர் போலீசில் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் புரி மாவட்டத்தை சேர்ந்த பினக் மோஹந்தி மற்றும் பிஸ்வஜித் மாலிக் என்ற 2 பேரை கைது செய்தனர். இதில் மாலிக் என்பவர் மாநில பாஜக தலைவர் பசந்த குமாரை பொம்மை துப்பாக்கியால் சுட்டது தொடர்பாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டவர் என தெரிவித்தனர். #4YearsOfModiGovt #NarendraModi #Firecrackers #BJPOffice
Tags:    

Similar News