செய்திகள்

பாம்பு கடியுடன் தாய்ப்பால் கொடுத்த பெண், குழந்தை பரிதாப பலி

Published On 2018-05-25 19:11 IST   |   Update On 2018-05-25 19:11:00 IST
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் விஷத்தன்மை மிக்க பாம்பு கடித்தது தெரியாமல் தாய்ப்பால் கொடுத்த பெண்ணும், குடித்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர். #girldeath
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம், முசாபர் மாவட்டத்தில் உள்ள மன்ட்லா கிராமத்தை சேர்ந்த பெண் தனது இரண்டரை வயது குழந்தையுடன் நேற்றிரவு தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

அவரை விஷத்தன்மை மிக்க பாம்பு கடித்துள்ளது. இதை அறியாமல் தூங்கிய அவர் குழந்தை அழுததால் அதற்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார்.

சற்று நேரத்தில் இருவரும் மூச்சுத்திணறலுடன் மயங்கி விழுந்தனர். உறவினர்கள் அவர்களை அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

சிகிச்சை பலனின்றி முதலில் குழந்தையும், பின்னர் தாயும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். #tamilnews #girldeath
Tags:    

Similar News