செய்திகள்

புத்த கயா குண்டு வெடிப்பு வழக்கில் 5 பேர் குற்றவாளிகள் - என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

Published On 2018-05-25 07:28 GMT   |   Update On 2018-05-25 07:28 GMT
புத்த கயா வெடிகுண்டு தாக்குதல் வழக்கில் இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 5 பேர் குற்றவாளிகள் என என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. #BodhGayablast #convictedfiveMujahideen
பாட்னா:

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தின் புத்த கயா நகரம் புகழ்பெற்ற ஆன்மீக பகுதிகளில் ஒன்று. மகா போதி வழிபாட்டுத் தலம் அமைந்துள்ள இங்கு புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இப்பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றன.



இந்த தாக்குதல்களில் புத்த மத துறவிகள் உட்பட சிலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கினை விசாரணை செய்த தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 5 பேரையும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர்களுக்கான தண்டனை மே 31-ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. #BodhGayablast #convictedfiveMujahideen
Tags:    

Similar News