செய்திகள்

பாஜகவின் பணபலத்தை காங்கிரசின் மக்கள் பலம் தோற்கடிக்கும் - காங்கிரஸ்

Published On 2018-05-24 20:38 GMT   |   Update On 2018-05-24 20:38 GMT
மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மக்களவை தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் பாஜகவின் பணபலத்தை காங்கிரசின் மக்கள் பலம் தோற்கடிக்கும் என மாநில தலைவர் அசோக் தவான் சவால் விடுத்துள்ளார். #PalgharBypoll #AshokChavan
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மக்களவை தொகுதிக்கு மே 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் சிவசேனா, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

இந்நிலையில், வங்காவ் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் முதல் மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவருமான அசோக் சவான் பேசியதாவது:

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள பாஜக பால்கர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அதிகாரம் மற்றும் பணத்தை நம்பியுள்ளது. ஆனால், மக்கள் சக்தி அவர்களின் பண சக்தியை நிச்சயம் தோற்கடித்து விடும்.

தோல்வி ஏற்படும் என்ற பயத்தாலேயே மகாராஷ்டிர முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உள்பட பலரை பாஜக பிரசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளது.

மாநிலத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகளை ஆட்சியில் உள்ள பாஜக நிறைவேற்றவில்லை. இதற்காக, பிரதமர் மோடியும், தேவேந்திர பட்னாவிசும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். #PalgharBypoll #AshokChavan
Tags:    

Similar News