செய்திகள்

தலைமை நீதிபதிக்கு எதிராக கருத்து- நடிகை திவ்யா மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு

Published On 2018-05-15 06:42 GMT   |   Update On 2018-05-15 06:42 GMT
நடிகை திவ்யா மீது முன்னாள் ராணுவ அதிகாரியான அனில் கபோத்ரா சுப்ரீம் கோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
புதுடெல்லி:

தமிழ், கன்னட மொழி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை திவ்யா ஸ்பான்தனா. இவர் தனது பெயரை ரம்யா என மாற்றி படங்களில் நடித்து வந்தார்.

காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவர் எம்.பி. பதவி வகித்தார். தற்போது காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவராக பதவி வகிக்கிறார்.

இவர் காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்த போது தலைமை நீதிபதிக்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தார். லஞ்சம் பெற்ற அமர்வுக்கு வழக்குகளை ஒதுக்குகிறார் என சூசகமாக விளக்கும்படியான வார்த்தைகளை பயன்படுத்தினார்.

இந்த நிலையில் நடிகை திவ்யா மீது முன்னாள் ராணுவ அதிகாரியான அனில் கபோத்ரா சுப்ரீம் கோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் நடிகை திவ்யா ஸ்பான்தனா தனது டுவிட்டரில் தலைமை நீதிபதிக்கு எதிராக லஞ்சம் பெற்ற அமர்வுக்கு வழக்கை ஒதுக்குகிறார் என மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது. #Tamilnews
Tags:    

Similar News