செய்திகள்

எய்ம்ஸ் மருத்துவமனையில் நிதிமந்திரி அருண் ஜெட்லிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

Published On 2018-05-14 07:50 GMT   |   Update On 2018-05-14 07:50 GMT
மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #ArunJaitley #JaitleyTransplant
புது டெல்லி :

மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி கடந்த சில மாதங்களாகவே  சிறுநீரக பாதிப்பால் அவதியுற்று வந்தார். இதற்காக, கடந்த ஒருமாத காலமாக அவர் டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுவந்தார். இதன் காரணமாக வீட்டில் ஓய்வெடுத்தபடியே நிதியமைச்சக விவகாரங்களை அவர் கவனித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை 8 மணி முதல் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று வருவதாக எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு, எய்ம்ஸ்  இயக்குனர் ரந்தீப் குலரியாவின் சகோதரரும், அப்பல்லோ ஆஸ்பத்திரியின் சிறுநீரகவியல் மருத்துவருமான சந்தீப் குலரியா சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்துவருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே, அருண் ஜெட்லிக்கு இதய அறுவை சிகிச்சை மற்றும்  உடல் எடை அதிகரிப்பு அறுவைசிகிச்சைகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #ArunJaitley #JaitleyTransplant
Tags:    

Similar News