செய்திகள்

தலித் வீடுகளில் தலைவர்கள் சாப்பிடுவதால் மட்டுமே தீண்டாமை ஒழிந்து விடாது - மத்திய மந்திரி

Published On 2018-05-05 21:13 IST   |   Update On 2018-05-05 21:13:00 IST
தலித் வீடுகளுக்குள் நுழைந்து அரசியல் தலைவர்கள் அவர்களுடன் உணவு சாப்பிடுவதால் மட்டுமே தீண்டாமையை ஒழித்து விட முடியாது என மத்திய மந்திரி ராம் விலாஸ் பஸ்வான் குறிப்பிட்டுள்ளார். #Untouchability #RamVilasPaswan
மும்பை:

மும்பையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராம்விலாஸ் பஸ்வானிடம், தலித் வீடுகளில் பா.ஜ.க தலைவர்கள் சாப்பிடுவது தொடர்பாக ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ராம் விலாஸ் பஸ்வான், தலித் வீடுகளுக்குள் நுழைந்து அரசியல் தலைவர்கள் அவர்களுடன் உணவு சாப்பிடுவதால் மட்டுமே தீண்டாமையை ஒழித்து விட முடியாது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘நீங்கள் யார் வீட்டில் வேண்டுமானாலும் உணவருந்தலாம் ஆனால் சபரி வீட்டில் ராமர் சாப்பிட்டது போல் நாம் அவர்களுடன் ஒன்றிணைந்து விட முடியாது. பல ஆண்டுகளான எங்கள் அரசியல் வாழ்வில், நாங்கள் பலரது வீடுகளில் உணவு அருந்தியுள்ளோம் எனினும் அவர்களது சாதி என்ன என்பது பற்றி கேட்டது இல்லை.

தலித் வீடுகளில் அரசியல் தலைவர்கள் உணவு அருந்துவதால் மட்டுமே தீண்டாமை ஒழிந்துவிடும் என்பதும் சரியல்ல.

பெயரளவிற்கு அவர்களது வீடுகளுக்குச் சென்று உணவு உண்பதை விடுத்து, அவர்களின் அத்தியாவசிய தேவைகளான கல்வி போன்றவற்றை மேம்படுத்தவும், அவர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கவும் முயற்சிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார். #Untouchability #RamVilasPaswan

Similar News