செய்திகள்

காங்கிரஸ் இந்துக்களை அவமதிப்பதால் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - அமித்ஷா

Published On 2018-05-04 16:52 GMT   |   Update On 2018-05-04 16:52 GMT
காங்கிரஸ் இந்துக்களை அவமதிக்கிறது என குற்றம் சாட்டிய பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, இதுதொடர்பாக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறிஉள்ளார். #RahulGandhi #AmitShah
போபால்:

ஐதராபாத்தில் உள்ள மெக்கா மசூதியில் 2007-ம் ஆண்டு மே 18-ம்தேதி குண்டுவெடித்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை, குற்றத்தை நிரூபிக்க தேசிய புலனாய்வு அமைப்பு தவறிவிட்டது என்று கோர்ட்டு அனைவரையும் விடுவித்து தீர்ப்பளித்தது.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் கட்சி தொண்டர்கள் மத்தியில் பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐவர் விடுக்கப்பட்டதை குறிப்பிட்டு பேசுகையில், 2014 தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் இந்து பயங்கரவாதம் பற்றி பேசினார்கள். இந்துக்களின் கலாசாரத்தை அவமதித்தார்கள். இந்தியாவிற்கு அவமரியாதை செய்தார்கள். இதற்காக இந்துக்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். வழக்கு அரசியல் காரணத்திற்காக தொடங்கப்பட்டது என கோர்ட்டு கூறியது எனவும் குறிப்பிட்டார்.

மக்களை சாதியின் அடிப்படையில் பிளவுப்படுத்தி காங்கிரஸ் அரசியல் செய்கிறது எனவும் குற்றம் சாட்டினார்.  #RahulGandhi #AmitShah
Tags:    

Similar News